01

E   |   සි   |  

 திகதி: 2011-07-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

1427/2011: Provincial Council Revenue Department - Revenue Service Officers

1427/ ’11

 

கெளரவ இரான் விக்கிரமரத்ன,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    மாகாண சபைகளின் இறைவரித் திணைக்களங்கள் அறவிட்டு வந்த விற்பனைப் புரள்வு வரி 2011 வரவு செலவுத் திட்டம் மூலமாக இல்லாதொழிக்கப்பட்டமை காரணமாக தற்போது மாகாண சபைகளின் இறைவரித் திணைக்களங்களில் சேவையாற்றுகின்ற அலுவலர்களுக்குப் பயனுறுதிமிக்க கடமையொன்று இல்லையென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) நிதி அமைச்சின் செயலாளரது பணிப்புரையின் பிரகாரம் மாகாண இறைவரிச் சேவைப் பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினால் 2011.03.04 ஆம் திகதி வழங்கப்பட்ட பரிந்துரையின் பிரகாரம் மாகாண இறைவரி அலுவலர்கள், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு உள்ளீர்க்கப்படுவார்களா என்பதையும்;

(ii) ஆமெனில், அதற்காக எடுக்கும் காலம் யாது என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) அவ்வாறின்றேல், தற்போது எவ்விதமான கடமைகளும் இன்றி மாகாண சபைகளின் இறைவரித் திணக்களங்களில் உள்ள போட்டிப் பரீட்சையொன்றின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாகாண சபைகளின் இறைவரித் திணைக்களங்களுக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட 372 பட்டதாரிப் பதவிநிலைத் தரத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்களின் தொழிற் பிரச்சினை சம்பந்தமாக அரசாங்கம் வழங்குகின்ற தீர்வு யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-07-19

கேட்டவர்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.

அமைச்சு

நிதி, திட்டமிடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks