பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1319/ ’11
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2007.08.31 திகதிய வர்த்தமானி அறிவித்தலுக்கமைய இலங்கை திட்டமிடல் சேவையின் II/II பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையொன்றும் 2008.08.29 திகதிய வர்த்தமானி அறிவித்தலுக்கமைய மேற்படி பதவிக்கு மிகை ஊழியர் அடிப்படையில் ஆட்சேர்ப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையொன்றும் நடத்தப்பட்டதென்பதையும்;
(ii) பிரதேச செயலகங்களில் திட்டமிடல் கடமைகளில் ஈடுபட்டிருக்கும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த பின் சேவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர் என்பதையும்;
(iii) மிகை ஊழியர் அடிப்படையில் ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த பிரதேச செயலகங்களில் சேவையாற்றிய அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் சேர்த்துக்கொள்ளப்படாது அவர்களை ஒத்த தகைமைகளையும் மூப்புரிமையும் கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாத்திரம் மேற்படி பதவிக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டனரென்பதையும்;
(iv) இதன் மூலம் திட்டமிடல் சேவையில் சேர்வதற்கான சந்தர்ப்பத்தை இழந்த அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாரிய அநீதி ஏற்பட்டுள்ளதென்பதையும்
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) ஆமெனில், மிகை ஊழியர் அடிப்படையில் ஆட்சேர்ப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்டையில் சித்தியடைந்து நேர்முகப் பரீட்சைக்கு தோற்றிய அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் மேற்படி பதவியில் சேர்த்துக்கொள்ளப்படும் திகதி யாதென்பதையும்;
(ii) அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களுக்கான பதவியுயர்வு நடைமுறையொன்று தயாரிக்கப்படுமாவென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-07-19
கேட்டவர்
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.
அமைச்சு
நிதி, திட்டமிடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks