01

E   |   සි   |  

 திகதி: 2011-07-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

1177/2011: Ms. Sunila Abeysekara -Event at Law College

1177/ ’11

 

கெளரவ இரான் விக்கிரமரத்ன,—  உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      2010 டிசம்பர் 10 ஆம் திகதி ஐ.நா. வதிவிட இணைப்பாளர் அலுவலகத்தின் அனுசரணையுடன் சட்ட பீடம் மற்றும் மனித உரிமைகள் ஆய்வுக்கான நிலையம் ஆகியவற்றினால் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில் 1998 இல் ஐ.நா. மனித உரிமைகள் பரிசு பெற்ற சுனிலா அபேசேகர உரையாற்றுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பதையும்;

(ii) சுனிலா அபேசேகர உரையாற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஐ.நா. அந்நிகழ்வை இரத்துச் செய்தது என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் சுனிலா அபேசேகர உரையாற்றுவதற்கு அனுமதிக்கப்படாதது ஏன் என்பதையும்;

(ii) பல்கலைக்கழகம் ஒன்றில் யார் உரையாற்ற முடியும் என்பதை நிர்ணயிப்பதற்கான கொள்கை ஒன்று உள்ளதா என்பதையும்;

(iii) அவ்வாறெனின் அக்கொள்கை யாது என்பதையும்

அவர் கூறுவாரா?

(இ) சிந்தனைச் சுதந்திரத்தையும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் வேண்டிநிற்கும்  சர்வதேசக் கற்கையும் அறிவும் எவ்வாறு பல்கலைக்கழகங்களில் மேம்படுத்தப்படுகின்றது என்பதை அவர் கூறுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-07-05

கேட்டவர்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.

அமைச்சு

உயர் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks