04

E   |   සි   |  

 திகதி: 2011-06-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

1173/2011: Pensions Anomaly - Officers in three armed force

1173/ ’11

கெளரவ திஸ்ஸ அத்தநாயக்க,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட 6/2010 ஓய்வூதிய சுற்றறிக்கையின் பிரகாரம், 85% ஓய்வூதியம் உரித்தாவது, இராணுவ நடவடிக்கைப் பிரதேசங்களில் 05 வருட சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்துள்ள, ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு மாத்திரமே என்பதையும்;

(ii) முப்படை உத்தியோகத்தர்கள் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் கடடைமயாற்றுவது, பல்வேறு சந்தர்ப்பங்களிலும் குறித்த இராணுவ நிர்வாக சேவையின் தேவைப்பாட்டிற்கு அமையவேயன்றி அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலல்ல என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) முப்படையின் அனைத்து உத்தியோகத்தர்களையும் ஓய்வு பெறச்செய்கின்றபோது சமமான விதத்தில் கவனிக்க வேண்டும் என்பதை அவர்  ஏற்றுக்கொள்வாரா?

 (இ) அவ்வாறாயின், ஓய்வுபெறச்செய்கின்றபோது, இராணுவ நடவடிக்கைச் சேவைக்   காலத்தைக் கருத்தில்  கொண்டு ஓய்வூதிய சதவீதத்தைக் கணிப்பிடுவதன் மூலம்  ஏற்படும் முரண்பாட்டை அகற்றுவதற்கு குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவாரா  என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-06-22

கேட்டவர்

கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks