04

E   |   සි   |  

 திகதி: 2011-06-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

1170/2011: Dinner for Officers of Postal Department

1170/ ’11

கெளரவ திஸ்ஸ அத்தநாயக்க,—  தபால் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      உலக தபால் தினத்தை முன்னிட்டு 2010.10.04 ஆம் திகதி கட்டுபெத்த தேசிய பயிலுநர் சபை கேட்போர் கூடத்தில் வைபவமொன்று நடத்தப்பட்டுள்ளதென்பதையும்;

          (ii)     அது தவிர, குறித்த தினத்தைக் கொண்டாடுவதற்காக தபால் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் சிலரால் ஜெட் லயினர் கப்பலில் இராப்போசன விருந்தொன்றுடன் கூடிய நட்புறவுச் சந்திப்பொன்று நடத்தப்பட்டதென்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி விருந்துபசாரத்திற்கென தபால் திணைக்களம் செலவிட்ட பணத் தொகை யாதென்பதையும்;

(ii) அவ்வாறு பணம் செலவிடுவதற்கு உரிய முறையில் அனுமதி பெறப்பட்டிருந்ததா என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) ஆண்டுதோறும் சுமார் 26 மில்லியன் ரூபா நட்டத்தில் இயங்குகின்ற தபால் திணைக்களத்தின் சேவைத் தேவைகள் மற்றும் பணியாட்டொகுதியினரின் தேவைகள் பூர்த்திசெய்யப்படவிருந்தும் அதனை புறந்தள்ளி இவ்வாறு பணத்தைச் செலவு செய்திருப்பதானது அநீதியென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(ii) அவ்வாறாயின், அது தொடர்பாக எடுக்கவுள்ள நடவடிக்கை யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-06-22

கேட்டவர்

கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.

அமைச்சு

தபால் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks