02

E   |   සි   |  

 திகதி: 2011-05-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

1105/2011: Government land Distribution in Wilgamuwa

1105/ ’11

 

கௌரவ வசந்த அளுவிஹாரே,— காணி, காணி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவின் ஹெட்டிபொல கொடஉல்பத்தையில் அமைந்துள்ள அரசாங்க காணிகளை பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும்,

(ii) இதற்காக 1987 ஆம் ஆண்டு முதல் மேற்படி காணிகளை அனுபவித்து வந்தவர்களை அக்காணிகளில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும்,

(iii) குறித்த காணிகளை அவர்களுக்கு வழங்குவதற்கு காணிக் கச்சேரியினால் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும் வேறு ஆட்களுக்கு அக்காணிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதையும்,

(iv) இதன் காரணமாக இக்காணிகளை அனுபவித்து வந்தவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்படுகின்றது என்பதையும்

அவர் ஏற்றுக் கொள்வாரா?

(ஆ)    (i) தற்போது மேலே குறிப்படப்பட்டுள்ளவாறு காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதாயின், அவை எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும்,

(ii) மேற்படி அரசாங்க காணிகளை பகிர்ந்தளித்தல் அல்லது கைப்பற்றுதல் தொடர்பான விபரங்கள் யாவை என்பதையும்,

(iii) இதுவரை காலம் மேற்படி காணிகளை அனுபவித்து வந்தவர்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுப்பதற்கான நியாயமான வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-05-04

கேட்டவர்

கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.

அமைச்சு

காணி, காணி அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks