02

E   |   සි   |  

 திகதி: 2011-05-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

1099/2011: Admision of Students to Grade Six in Central College - Kuliyapitiya

1099/ ’11

 கௌரவ அகில விராஜ் காரியவசம்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    குளியாபிட்டி கல்வி வலயத்தின் பிரசித்திபெற்ற தேசிய பாடசாலையான குளியாபிட்டி மத்திய மகா வித்தியாலயத்தில் 6 ஆம் தரத்திற்காக ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் முறைமையியலில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) 2006 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களில் மேற்படி பாடசாலைக்கான மாணவர்களை தெரிவு செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப்புள்ளி மட்டம் எவ்வளவென்பதையும்,

(ii) குளியாபிட்டி மத்திய மகா வித்தியாலயத்தில் 6 ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் முறைமையியல் யாதென்பதையும்,

(iii) மேற்படி முறைமையியலுக்கு முரணாகச் சென்று 2006 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் பாடசாலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனரா என்பதையும்,

(iv) ஆமெனின் அவ்வெண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

(v) மேற்படி மாணவர்கள் எந்த அடிப்படையில் பாடசாலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள் என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-05-04

கேட்டவர்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks