02

E   |   සි   |  

 திகதி: 2011-05-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

1061/2011: Jathika Pilisaru Project

1061/ ’11

 கெளரவ வசந்த அலுவிஹாரே,—  சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)    மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய ‘பிலிசரு’ கருத்திட்டம் எந்த அடிப்படையில் நடமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ)    (i)     இந்த திட்டத்தின் கீழ் கொம்போஸ்ட் பசளை கருத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்காக மாத்தளை மாநகர சபைக்கும் மத்திய சுற்றாடல் அதிகாரச்சபைக்கும் இடையில் 2009 இல் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது என்பதையும்,

(ii) அந்த உடன்படிக்கையின்படி குறிப்பிட்ட கருத்திட்டத்துக்காக ரூபா 2,750,000/- தொகை மத்திய சுற்றடல் அதிகார சபைியினால் மாத்தளை மாநகர சபைக்கு வழங்கப்பட்டு்ளளது என்பதையும்,

(iii) உடன்படிக்கைக்கமைய 2010, மார்ச் மாதமாகும் போது மேற்படி கருத்திட்டம் பூர்த்தி செய்யப்படவேண்டிய போதிலும் மாத்தளை மாநகர சபைியினால் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும்

அவர் அறிவாரா?

(இ) (i) அந்த கருத்திட்டத்துக்கான உடன்படிக்கைக் காலம் முடிவடைந்ததன் பின்னர் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் அது சம்பந்தமாக எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் யாவை என்பதையும்,

(ii) மேற்கூறிய உடன்படிக்கை மீறப்பட்டிருக்கும் போது மாத்தளை மாநகர சபையினால் மீண்டும் அவ்வாறானதோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட முடியுமா என்பதையும்,

(iii) அவ்வாறெனின், அதற்கு அடிப்படையாகக்கொள்ள வேண்டிய விடயங்கள் யாவை என்பதையும்

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-05-03

கேட்டவர்

கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks