பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1060/ ’11
கெளரவ வசந்த அலுவிஹாரே,— துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) மாத்தளை – ரத்தோட்டை வீதியை அபிவிருத்தி செய்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி வீதியை அபிவிருத்தி செய்வதற்கான நிலஅளவைப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு வீதி வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) மேற்படி கருத்திட்டத்திற்காக மதிப்பிடப்பட்டுள்ள தொகை யாதென்பதையும்;
(iii) அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பணத் தொகை யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இவ்வீதியை விஸ்தரிக்கின்ற பணியின்போது,
(i) சுவீகரிக்கப்படும் காணிகளின் பரப்பளவு மற்றும் உடைத்தகற்றப்படும் வீடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி காணிகள் மற்றும் வீடுகளை இழப்போரின் பெயர்களையும்;
(iii) மேற்படி ஆதனங்கள் சுவீகரிக்கப்படுகின்றமை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்படாவிடின் அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) (i) மேற்படி வீதியை விஸ்தரிக்கின்றபோது சுவீகரிக்கப்படும் ஆதனங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா என்பதையும்;
(ii) அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பணத் தொகை யாதென்பதையும்;
(iii) குறித்த இழப்பீட்டுத்தொகை செலுத்தி முடிக்கப்படும் திகதி யாதென்பதையும்;
(iv) சுவீகரிக்கப்படும் காணிகளுக்காக மாற்றுக்காணிகள் வழங்கப்படுமா என்பதையும்;
(v) அவ்வாறாயின், குறித்த காணிகள் வழங்கப்படும் இடம் யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-05-20
கேட்டவர்
கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.
அமைச்சு
துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks