01

E   |   සි   |  

 திகதி: 2021-03-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

1432/2021: 2015-2020 காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரச, முப்படை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்: விபரம்

----

கேட்கப்பட்ட திகதி

2021-03-25

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(அ)    (i)        2016.01.01 முதல் 2019.12.31 வரை ஓய்வுபெற்ற அரசாங்க மற்றும் பொலிஸ் ஊழியர் எண்ணிக்கை (சிவில்)                              - 67911

                     முப்படை ஊழியர்களின் எண்ணிக்கை    - 33617

                     மொத்தம்                                          - 101528

          (ii)       2016.01.01  முதல் 2019.12.31 வரை விதவைகள் அநாதைகள் மற்றும் தபுதாரர்கள் அநாதைகள் என்ற அடிப்படையில் ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு ஓய்வூதியம் செலுத் துவதற்காகச் செலவிட்ட தொகை தொடர் பான தகவல்களை இத்துடன் இணைத்துச்  சமர்ப்பிக்கப்படுகின்றது. (இணைப்பு 01-02)

(iii) 2015.01.01 முதல் 2015.12.31 வரை ஓய்வுபெற்று திணைக்களத்திற்கு விண்ணப்பங்கள் சமர்ப்பித்துள்ள அரச ஊழியர் எண்ணிக்கை - 23583

  2020.01.01 முதல் 2020.12.31 வரை ஓய்வுபெற்று திணைக்களத்திற்கு விண்ணப் பங்கள் சமர்ப்பித்துள்ள அரச ஊழியர் எண்ணிக்கை - 24319

(iv) 2020.12.31இல் உள்ளவாறான ஓய்வூதியம் பெறும் அரச ஊழியர் எண்ணிக்கை - 660934

அவர்களுக்கு டிசம்பர் மாதம் வரையில் ஓய்வூதியம் வழங்குவதற்குச் செலுத்திய தொகை - 19,951,890,787.41

(2020.01.01 முதல் 2020.12.31 வரையான மொத்தச் செலவுகள் இணைப்பு 03இன் மூலம் காட்டப்பட்டுள்ளன.)

(ஆ) (i) 35/2019 இணங்க 2016.01.01 முதல் 2019.12.31 வரை ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்களுக்கு 2020.01.01 வரை செலுத்த வேண்டிய ஓய்வூதியத்தைச் செலுத்துவதற்கு ஏறக்குறைய 11 பில்லியன் ரூபா மேலதிக ஒதுக்கீடு தேவைப்படும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

(ii) 2016.01.01 முதல் 2019.12.31 வரை ஓய்வுபெற்ற ஓய்வூதியக்காரர்களில் 2020.12.31ஆம் திகதியில் உள்ளவாறான மரணித்தோரின் எண்ணிக்கை - 1849

(iii) கொடுப்பனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் திகதியில்,

(iv) ஓய்வூயக் கொடுப்பனவு மேற்கொள்ளும்போது 2020 ஆம் ஆண்டாகும்போது பொது நிருவாக சுற்றரிக்கை 3/2016 உச்ச சம்பளத் திட்டத்திற்கமைய, ஓய்வூயக் கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 2020ஆம் ஆண்டில் ஓய்தியம் பெறும் உத்தியோகத்தர் களின் ஓய்வூதியக் கொடுப்பனவைக் கணக்கிடுவது பொது நிருவாக சுற்றரிக்கை 3/2016இன்படி 2020 ஆம் ஆண்டுக்குரிய உச்ச சம்பள அடிப்படையிலாகும். எனினும், பொது நிருவாக சுற்றரிக்கை 35/2019இனூடாக பெற்றுக்கொடுப்பதற்கு உத்தேசித்திருக்கும் சம்பளத்தின் அடிப்படையில் இதுவரை அவர்களது ஓய்வூதியக் கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு பொது நிருவாக சுற்றரிக்கை 35/2019 செல்லுபடியாகாது.

(இ) மேற்படி விடை கொடுக்கப்பட்டுள்ளதால் ஏற்புடையதாகாது.

 

பதில் தேதி

2021-03-25

பதில் அளித்தார்

கௌரவ ஜனக பண்டார தென்னகோன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks