01

E   |   සි   |  

 திகதி: 2021-02-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

1356/2021: இறக்குமதி செய்யப்பட்டுத் திருப்பியனுப்பப்பட்ட மீன் ரின்கள்: விபரம்

1356/2020

கௌரவ அநுர திசாநாயக்க,— வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கைக்கு 2020 ஆம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள டின் மீன்கள் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் திருப்பியனுப்பப்பட்டுள்ளனவா என்பதையும்;

(ii) ஆமெனில், அவ்வாறு திருப்பியனுப்பப்பட்டுள்ள திகதி, அளவு மற்றும் திருப்பியனுப்புவதற்கான காரணங்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;

(iii) அவ்வாறு திருப்பியனுப்பப்பட்டுள்ள டின் மீன்களை இறக்குமதி செய்துள்ள நிறுவனங்கள் அல்லது நபர்களின் பெயர்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-02-23

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

வர்த்தகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(அ)    (i)      தொழில்நுட்ப அமைச்சின் கீழுள்ள இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் வழங்கப் பட்டுள்ள தகவல்களுக்கமைய 2021இல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இருப்பு டின் மீனை மீள் அனுப்புவதற்கு அறிவுரை செய்யப்பட்டுள்ளது.

          (ii)     இலங்கை சுங்கத்துக்கு மீள் அனுப்பப்ட்ட டின் மீன்களுடைய பரிந்துரை செய்யப்பட்ட திகதி மற்றும் அளவுகள் இணைப்பு 01இல் குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் பரிந்துரை செய்யப்பட்ட ஆசனிக் மூலக்கூறு களின் தன்மை, இறக்குமதி செய்யப்பட்ட                   டின் மீன்களுடன் பொருத்தப்பாடின்மையே அவற்றை மீள் அனுப்புவதற்கான காரணமாக வுள்ளது.

(iii) இலங்கை கட்டளைகள் நிறுவனத்தால் வழங்கப் பட்டுள்ள தகவல்களுக்கு அமைய மேற்குறிப் பிடப்பட்ட டின் மீன்களை இறக்குமதி செய்து மீள் திருப்பியனுப்பப்பட்ட நிறுவனங்கள் அல்லது நபர்களின் பெயர்கள் இணைப்பு 02இல் குறிப் பிடப்பட்டுள்ளது.

(ஆ) வினா எழவில்லை

பதில் தேதி

2021-02-23

பதில் அளித்தார்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks