04

E   |   සි   |  

 திகதி: 2020-11-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0732/2020: “ஈ - வர்த்தகம்” ஊடாக பொருட்கள் விற்பனை: வசதிகள் வழங்குதல்

732/2020 கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) நாடுகளுக்கிடையே பொருட்களை விற்பனை செய்வதற்கு இலகுமான முறை “ஈ – வர்த்தகம்” (E—Commerce) இணையத்தளமூடான விற்பனையாக இருப்பதனால், அதற்காக சுமார் 305 மில்லியன் அளவிலான உலக மக்கள் “பே பேல்” (Pay Pal) மற்றும் “கேட்வே” (Gateway) என்பவற்றைப் பயன்படுத்துகின்றார்கள் என்பதையும்; (ii) இலங்கையின் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு மேற்படி முறையினைப் பயன்படுத்த முடியுமென்பதையும்; (iii) இலங்கை மத்திய வங்கியால் மேற்படி முறையானது இலங்கையில் ஆரம்பிக்கப்படாமையால் பொருட்கள் / சேவைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து, அந்நியச் செலாவணியை பெறக்கூடிய வருமான வழியானது தடைப்பட்டுள்ளது என்பதையும்; (iv) இலங்கையில் காணப்படுகின்ற “இணையவழி” (online) முறைக்கமைய சேவைகளை வழங்கும் சிறுவனங்கள் வெளிநாட்டு முகவரிகளைப் பயன்படுத்தி “பே பேல்” (Pay Pal) கணக்குகளைத் தயார் செய்கின்றன என்பதையும்; (v) இதன் காரணமாக இலங்கைக்கு கிடைக்கக் கூடிய பெருமளவு நிதியை தரகுப் பணமாக வெளிநாடுகளுக்குச் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதென்பதையும்; அவர் இச்சபையில் அறிவிப்பாரா? (ஆ) (i) இலங்கையின் உற்பத்திகள், சேவைகள் “இணையவழி” (online) முறைமைக்கமைய வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கையில் காணப்படும் தடைகளை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்; (ii) மேற்படி நடவடிக்கைகள் யாவையென்பதையும் அவர் இச்சபையில் அறிவிப்பாரா? (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-26

கேட்டவர்

கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-04-05

பதில் அளித்தார்

கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks