04

E   |   සි   |  

 திகதி: 2021-01-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0640/2021: கொழும்பு 14, ஜயந்தி வித்தியாலயம்: உட்கட்டமைப்பு வசதிகள்

640/2020

கௌரவ ரஊப் ஹகீம்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) கொழும்பு 14, கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள மேமா/கொ/ ஜயந்தி வித்தியாலயமானது, பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வி பயிலும், தரம் 1 முதல் தரம் 11 வரை வகுப்புக்கள் நடாத்தப்படும் ஒரு பாடசாலையென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி பாடசாலையின் தற்போதைய நிலைமையை ஆராய்ந்து பார்ப்பதற்காக பொறுப்புக் கூறுவோர் இறுதியாக இப்பாடசாலையை கண்காணித்துள்ள திகதி யாது;

(ii) பாடசாலையைச் சுற்றியுள்ள அபாயகரமான மதிலை புனரமைத்தல், உள்ளக வடிகால் முறைமை, கட்டிடத்துக்கான வலை பாதுகாப்பு, உள்ளக பிரவேசப் பாதை, நீர் மற்றும் மின்சார முறைமை, வகுப்பறைகள், மலசலகூட வசதிகள், கணினி தேவைப்பாடுகள், ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் காவலாளி பதவியில் நிலவும் ஒரு வெற்றிடம் போன்ற தேவைப்பாடுகள் தொடர்பில் கவனஞ் செலுத்துவாரா;

(iii) ஆமெனில், மேற்படி பாடசாலையில் நீண்ட காலமாக நிலவும் குறிப்பிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்வாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-01-08

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-01-08

பதில் அளித்தார்

கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks