04

E   |   සි   |  

 திகதி: 2020-12-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0522/2020: பொலன்னறுவை மாவட்டப் பாலுற்பத்தி: விபரம்

522/2020

கெளரவ அமரகீர்த்தி அதுகோரள,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள பாற்பண்ணையாளர்கள், பசுமாடுகள், கறவைப் பசுக்கள், எருமை மாடுகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) பொலன்னறுவை மாவட்டத்தில் அதிகளவான பாற்பண்ணையாளர்களைக் கொண்டுள்ள பிரதேசம் யாது என்பதையும் ;

(ii) அவர்களுக்கு அரசாங்கம் பசுமாடுகளை வழங்கியிருப்பின் அந்த எண்ணிக்கை யாது என்பதையும்;

(iii) இறுதியாக அவ்வாறு பசுமாடுகள் வழங்கப்பட்டுள்ள திகதியும் அவற்றில் தற்போது உயிர் வாழ்பவற்றின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iv) பசுமாடுகளை போஷிப்பதற்காக அரசாங்கம் புற்தரைகளை வழங்கியிருப்பின் அவற்றின் அளவு யாது என்பதையும்;

(v) எதிர்காலத்தில் பற்பண்ணையாளர்களுக்கு வழங்குவதற்காக புற்தரைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனவா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) இலங்கையின் நாளொன்றுக்கான மொத்த பால் உற்பத்தியில் பொலன்னறுவை மாவட்டப் பாலுற்பத்தியாளர்களின் பங்களிப்பின் சதவீதம் எவ்வளவென்பதையும்;

(ii) பொலன்னறுவை மாவட்டத்தில் நாளொன்றுக்கு பசுக்களிலிருந்து எவ்வளவு பால் பெறப்படுகின்றது என்பதையும்;

(iii) தேசிய கால்நடை அபிவிருத்தி சபை / மில்க்கோ தனியார் நிறுவனம் மூலம் நாள்தோறும் கொள்வனவு செய்யப்படும் பாலின் அளவு எவ்வளவென்பதையும்;

(iv) ஒரு லீற்றர் பாலின் விலை எவ்வளவு என்பதையும்

அவர் மேலும் இச்சபைக்கு அறிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-12-10

கேட்டவர்

கௌரவ அமரகீர்த்தி அதுகோரள, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-12-10

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks