01

E   |   සි   |  

 திகதி: 2011-04-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0928/2011: Maththala International Airport -Hambanthota

0928/ ’10

கெளரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா,—  சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      அம்பாந்தோட்டை மத்தல புதிய விமான நிலைய கருத்திட்டத்துக்காக மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த செலவினத்தில் உள்நாட்டிலிருந்து ஈட்டிக் கொள்ளும் தொகை யாதென்பதையும்,

(ii) வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் தொகை யாதென்பதையும்,

(iii) அந்தக் கருத்திட்டத்திற்கு நிதி கிடைக்கும் வழிகள் யாவையென்பதையும்,

(iv) மொத்தச் செலவினத்தில் கடனாகக் கிடைக்கும் தொகை யாதென்பதையும்,

(v) கடன் தொகைகளை வழங்கும் நாடுகள், குறிப்பிட்ட வட்டி வீதங்கள் மற்றும் கடனை அடைக்கும் கால எல்லைகள் யாவையென்பதையும்,

(vi) முழுமையான கருத்திட்டத்தையும் பூர்த்தி செய்ய எடுக்கும் காலம் யாதென்பதையும்

அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?

(ஆ) இந்தக் கருத்திட்டத்தின் பணிகளுக்காக ஊழியர்களை ஆட்சோர்ப்புச் செய்யும் விதி முறை யாதென்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-04-05

கேட்டவர்

கௌரவ கௌரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா, பா.உ.,, பா.உ.

அமைச்சு

சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks