02

E   |   සි   |  

 திகதி: 2020-10-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0477/2020: 2015 - 2020 வரையிலான வீடமைப்புக் கருத்திட்டங்கள்: அம்பாந்தோட்டை மாவட்டம்

477/2020

கெளரவ திலிப் வெதஆரச்சி,— பிரதம அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீடமைப்புக் கருத்திட்டங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீடமைப்புக் கருத்திட்டங்களின் எண்ணிக்கை;

(ii) அவற்றுள் இன்றளவில் குடியிருப்புக்காக வழங்கப்பட்டுள்ள வீடமைப்புக் கருத்திட்டங்களின் எண்ணிக்கை;

(iii) இன்றளவில் குடியிருப்புக்காக வழங்கப்படாதுள்ள வீடமைப்புக் கருத்திட்டங்களின் எண்ணிக்கை;

(iv) மின்சாரம், நீர் மற்றும் வீதி வசதிகள் வழங்கப்பட்டுள்ள வீடமைப்புக் கருத்திட்டங்களின் எண்ணிக்கை;

(v) மின்சாரம், நீர் மற்றும் வீதி வசதிகள் வழங்கப்படாதுள்ள வீடமைப்புக் கருத்திட்டங்களின் எண்ணிக்கை;

எத்தனை என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-20

கேட்டவர்

கௌரவ திலிப் வெதஆரச்சி, பா.உ.

அமைச்சு

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2020-10-20

பதில் அளித்தார்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks