04

E   |   සි   |  

 திகதி: 2020-11-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0432/2020: மஹபொல புலமைப்பரிசில் பெறுநர்கள்: விபரம்

432/2020

கௌரவ சாந்த பண்டார,— வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களிலிருந்து அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு மஹபொல புலமைப் பரிசில் வழங்கப்படுவதை அவர் அறிவாரா?

(ஆ) (i) 2020 ஆம் ஆண்டில் மஹபொல புலமைப் பரிசில் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த மாணவர்களின் எண்ணிக்கை;

(ii) மேற்படி புலமைப் பரிசிலைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய ஆகக் குறைந்த தகைமை யாது;

என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) (i) மஹபொல புலமைப்பரிசில் பெறுவதற்கான தகைமை இருந்தும் அந்தப் புலமைப் பரிசில் கிடைக்காத மாணவர்கள் உள்ளனர் என்பதை அவர் அறிவாரா;

(ii) அவ்வாறான மாணவர்களுக்கு நியாயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா;

என்பதையும் அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-18

கேட்டவர்

கௌரவ சாந்த பண்டார, பா.உ.

அமைச்சு

வர்த்தகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-12-07

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks