பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2021-01-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0425/2021: வயம்ப கால்வாய் கருத்திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட காணிகள்: இழப்பீடு

425/2020

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) ஏற்கனவே நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுவரும் வயம்ப கால்வாய் கருத்திட்டத்தின் தற்போதைய நிலை யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி கருத்திட்டத்திற்கு கையப்படுத்தப்பட்ட இறையிலிக் காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுதல் முறைகேடாக அமைந்துள்ளதென்பதையும்;

(ii) விஹாரைகளுக்கு சொந்தமான காணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் போது மேற்படி காணிகளை இருப்பாட்சி செய்பவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு போதுமானதாக இல்லையென்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(இ) ஆமெனில், இவ்விடயத்தில் நீதியான முறையில் இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) (i) ஏற்கனவே நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுவரும் "ரங்வெடியாவ" பகுதியில் கால்வாயின் ஆழம் 40 அடியையும் விட அதிகமாக இருப்பதால் அதற்கு அண்மித்த குடிநீர் கிணறுகள் மற்றும் விவசாயக் கிணறுகள் வற்றிப்போனதால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளார்கள் என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(ii) ஆமெனில், இவ்வாறு இன்னலுக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு துரிதமாக தீர்வுகள் வழங்கப்படுமா என்பதையும்;

(iii) அத்தீர்வுகள் யாவையென்பதையும்;

அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-01-07

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசனம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-01-07

பதில் அளித்தார்

கௌரவ சமல் ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks