பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2020-10-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0423/2020: Issues in constructing Kurunegala-Habarana Railway Line

423/2020

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) குருணாகல் – ஹபரண புகையிரதப் பாதையை நிர்மாணிப்பது தொடர்பான தற்போதைய நிலையை அவர் இச்சபையில் விளக்குவாரா?

(ஆ) (i) இக்கருத்திட்டத்தில் பாதையை நிச்சயித்துக் கொள்வதற்காக மூன்று முறை அளவிடல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதையும்;

(ii) மூன்றாவது அளவிடலுக்கு அமைவாக இப்புகையிரதப் பாதையை நிர்மாணிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதையும்;

(iii) அம்மூன்றாவது அளவிடலுக்கு அமைவாக தம்புள்ள அத்துபாரயாய கிராமத்தை அண்டியதாக நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்ட புகையிரத நிலையம், முதலாவது அளவிடலின் போது முன்மொழியப்பட்ட புகையிரத நிலையத்தை விட நகரத்திலிருந்து அதிக தொலைவில் அமைந்துள்ளது என்பதையும்;

அவர் அறிவாரா?

(இ) (i) மூன்றாவது அளவிடலுக்கு அமைவாக அத்துபாரயாய கிராமத்தை அண்டியதாக புகையிரத நிலையத்தை நிர்மாணிப்பதற்கு உத்தேசித்துள்ள காணியானது உயர் பொருளாதாரப் பெறுமதியைக் கொண்டதொன்றா;

(ii) இன்றேல், தற்போதைய சந்தைப்பெறுமதிக்கு ஏற்ற வகையில் இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படமா;

என்பதை இச்சபையில் அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-08

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-10-08

பதில் அளித்தார்

கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks