பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2020-11-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0422/2020: மத்திய அதிவேக நெடுஞ்சாலைக் கருத்திட்டம்: இழப்பீடு

422/2020

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன,— பெருந்தெருக்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) உத்தேச மத்திய அதிவேக நெடுஞ்சாலைக் கருத்திட்டத்தின் நான்காவது கட்டத்தின் (குருணாகல் — தம்புள்ளை) தற்போதைய நிலைமையை இச்சபையில் அறிவிப்பாரா என்பதையும்;

(ii) மேற்படி கருத்திட்டம் காரணமாக ஆதனங்களை இழந்தவர்களுக்காக செலுத்தப்படுகின்ற இழப்பீட்டுத் தொகை இன்றளவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) அவ்வாறாயின் அதனை இச்சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(iv) மேற்படி கருத்திட்டத்தால் விகாரைகளுக்குச் சொந்தமான ஆதனங்களை அனுபவிப்பவர்கள் இழக்கின்ற ஆதனங்களுக்கென இழப்பீடு வழங்கப்படும் விதம் யாது என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) மேற்படி கருத்திட்டத்திற்காக இழப்பீடு செலுத்தும் போது —

(i) காணிக்காக கொடுப்பனவுகள் செலுத்தப்படும் சதவீதம் யாது என்பதையும்;

(ii) அபிவிருத்திப் பெறுமதிக்காக கொடுப்பனவுகள் செலுத்தப்படும் விதம் யாது என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-06

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-12-05

பதில் அளித்தார்

கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks