02

E   |   සි   |  

 திகதி: 2020-11-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0350/2020: Vacancies in Assistant Superintendent of Police

350/2020 கௌரவ முஜிபுர் ரஹுமான்,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) இது வரையில் காணப்படுகின்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்; (ii) பொலிஸ் கான்ஸ்டபிள் பதவி தொடக்கம் பிரதான பொலிஸ் பரிசோதகர் பதவி வரையிலும் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பதவி தெடக்கம் சிரேஷ்ட பிரதிப் பொாலிஸ்மா அதிபர் வரையிலான பதவிகளில் வெற்றிடங்கள் காணப்படுகின்றதா என்பதையும்; (iii) மேற்படி பதவிகளுக்காக அண்மைக் காலமாக காலவாய்ப்பான பதவியுயர்வு களை வழங்குகையில் பின்பற்றபட்ட முறையியல் யாது என்பதையும்; (iv) மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கான பதவி உயர்வுகளை வழங்குகையில் குறித்த பதவிகளுக்காக இருக்க வேண்டிய அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கை தொடர்பில் கவனத்தில் கொள்ளப்பட்டதா என்பதையும்; (v) சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியில் பதில் கடமையாற்றுவதற்காக அண்மையில் காலவாய்ப்பான பதவியயர்வுகளை வழங்குகையில், குறித்த பதவிகளில் இருக்க வேண்டிய அங்கீகரிக்கப்பட்ட ஆளணியினரின் எண்ணிக்கையினை கவனத்தில் கொள்ளாது அதனை விஞ்சியதாக இரண்டரை வருட சேவைக் காலத்தைக் கொண்ட உத்தியோகத்தர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்ட முறையியல் யாது என்பதையும்; (vi) பிரதான பொலிஸ் பரிசோதகர் பதவி தொடக்கம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பதவி வரையில் காலவாய்ப்பான பதவியுயர்வு வழங்குகையில் மேற்படி (v) இல் கூறப்பட்ட முறையியலைப் பின்பற்றாமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-05

கேட்டவர்

கௌரவ முஜிபுர் ரஹுமான், பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks