பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
343/2020
கௌரவ மயந்த திசாநாயக்க,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு, —
(அ) (i) இன்றளவில் இலங்கையில் பயிர்ச் செய்கை மேற்கொள்கின்ற மொத்த வயற் காணிகளின் அளவு யாதென்பதையும்;
(ii) அவற்றுள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள வயற் நிலங்களின் அளவு யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) தற்போது இலங்கையிலுள்ள தரிசு வயல் நிலங்களின் அளவு யாதென்பதையும்;
(ii) அவை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்துவதற்கான திட்டமொன்று செயற்படுத்தப்படுகின்றதா என்பதையும்;
(iii) பயிர்ச் செய்கைக்குத் தேவையான விதைகள் மற்றும் உரம் போன்றவற்றை உரிய முறையில் வழங்கப்படுகின்றதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) பயிரரச்செய்கைக்குத் தேவையான இயந்திர சாதனைகள் சலுகை விலை அடிப்படையில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) இளந்தலைமுறையினர் கமத்தொழிலில் ஈடுபடாமையின் காரணமாக ஏற்பட்டுள்ள ஊழியப்படை குறைவினை நிவர்த்தி செய்வதற்காக கவர்ச்சிகரமான திட்டமொன்று செயற்படுத்தப்படுகின்றதா என்பதையும்;
அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-09-24
கேட்டவர்
கௌரவ மயந்த திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-09-24
பதில் அளித்தார்
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks