04

E   |   සි   |  

 திகதி: 2011-02-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0913/2011: Grade 1-Viharamahadevi Vidyalaya- Kiribathgoda

0913/ ’10

கெளரவ திஸ்ஸ அத்தநாயக்க,—  கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    2010 ஆம் ஆண்டில் கிரிபத்கொட விஹாரமகாதேவி மகளிர் வித்தியாலயத்தில் முதலாம் தரத்திற்கு மாணவியர்களை சேர்த்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைக்குப் பின்னர் பாடசாலைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட, காத்திருப்போர் பட்டியலில் இருந்த மற்றும் காத்திருப்போர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படாத ஒவ்வொரு மாணவியினதும் பெயர், முகவரி மற்றும் பெற்றுக்கொண்ட புள்ளிகள் வெவ்வேறாக யாவை என்பதனை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) 2010 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்களின் விசேட கட்டளையின் பேரில் அப்பாடசாலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட 5 மாணவியர்களினதும் பெயர்கள், முகவரிகள், பெற்றுக்கொண்ட புள்ளிகள் மற்றும் அதற்கான விசேட காரணம் யாவையென்பதையும்,

(iii) 2010, ஒற்றோபர் மற்றும் நவெம்பர் மாதங்களில் கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்களின் கட்டளையின் பேரில் கல்வி அமைச்சின் செயலாளரின் சுற்றுநிருபத்திற்கு முற்றிலும் முரணாக பாடசாலை அதிபரால் சேர்த்துக் கொள்ளப்பட்ட நேர்முகப் பரீட்சையில் குறைந்த புள்ளிகள் பெற்ற 18 மாணவிகளின் பெயர்கள், முகவரிகள் மற்றும் இவர்கள் பெற்ற புள்ளிகள் யாவை என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா ?

(இ) மேற்சொன்னவாறு கல்வி அமைச்சின் செயலாளரின் சுற்றுநிரூபத்திற்கும் அமைச்சரின் கொள்கைகளுக்கும் முரணான வகையில் மாணவர்களை பாடசாலைக்கு சேர்த்துக்கொண்ட அமைச்சு உத்தியோகத்தர்களுக்கும் பாடசாலை அதிபருக்கும் எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் சட்டத்தின் அல்லது வேறேதும் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படுமா என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன் ? 

 

கேட்கப்பட்ட திகதி

2011-02-25

கேட்டவர்

கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks