பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0909/ ’10
கெளரவ எம். ரீ. ஹசன் அலி,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சம்மாந்துறை, இலக்கம் 3, எம்.பீ.சீ.எஸ். ஒழுங்கையில், 343/2 இலக்க முகவரியில் வதியும், திரு.ஏ.எம்.இஸ்மயில் (உ.பொ.கா. 20302) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து பொத்துவில் பொலிஸ் நிலையத்திற்கு இணைக்கப்பட்டு சேவையில் ஈடுபட்டிருந்துபோது பாம்பு தீண்டியதால் சேவைக்கு சமூகமளிக்க முடியாமையை அறிவிக்க தாமதமானதால் இவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டார் என்பதையும்,
(ii) இவரை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு சமர்ப்பித்த மேன்முறையீடு தொடர்பிலான விசாரணை தற்போது முற்றுப் பெற்றுள்ளதுடன் அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் எஸ்/2/1/380/09 இலக்கமும் 2009/06/05 திகதியும் கொண்ட கடிதத்தின் மூலம் கிழக்கு பிராந்திய (தெற்கு) பிரதி பொலிஸ் மா அதிபருக்கு திரு. இஸ்மயிலை சேவையில் மீளமர்த்துமாறு எழுத்து மூல விதப்புரை வழங்கப்பட்டிருந்தும் இற்றைவரை இவர் சேவையில் மீளமர்த்தப்படவில்லை என்பதையும்,
அவர் அறிவாரா?
(ஆ) ஆமெனில், சேவையிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த காலத்தில் எந்தவித குற்றச் செயல்களிலோ அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளிலோ ஈடுபடாமல் நன்நடத்தையுடன் நடந்துகொண்ட திரு. இஸ்மயிலை 1998 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வருமாறு மீண்டும் சேவையில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-04-05
கேட்டவர்
கௌரவ கௌரவ எம்.ரி. ஹஸன் அலி, பா.உ.,, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks