பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2011-03-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0907/2011: Illicit Construction in Galle City

0907/10

கெளரவ மொஹமட் அஸ்லம்,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் காலி நகர்சார் ஆளுகைப் பிரதேசத்தில் இற்றைவரை இனங்காணப்பட்டுள்ள அனுமதியற்ற மற்றும் சட்டவிரோத நிர்மாணங்களின் எண்ணிக்கை மற்றும் அவை அமைந்துள்ள இடங்கள் யாவையென்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) காலி நகரத்திலுள்ள  மேற்படி நிர்மாணங்களில் இருமாடிக்கட்டிடம் ஒன்றின் மேல் மாடியில் கூரையில்லாத செங்கல் சுவரொன்று மழை நீரில் கரைந்து உடைந்துவிழும் ஆபத்தான நிலைக்குள்ளாகியுள்ளது என நகர அபிவிருத்தி அதிகாரசபையின் காலி மாவட்டப் பணிப்பாளருக்கு 05/02/அன/பெ/4462 இலக்கமுடைய 2010/02/09 ஆம் திகதிய கடிதத்தின் மூலம் வலுவாக்கல் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதென்பதையும்,

(ii) இது தொடர்பாக நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளருக்கு (ஒம்புட்சுமான்) காலி நகர ஆணையாளரினால் ME/UA/2008/103 இலக்கமுடைய 2008/9/15 ஆம் திகதிய கடிதத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதென்பதையும்,

(iii) இற்றைவரை இந்த சட்டவிரோதமானதும் ஆபத்தானதுமான நிர்மாணத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்பதையும்,

அவர் அறிவாரா?

(இ) மேற்படி “அ” பந்தியில் இனங்காணப்பட்ட சட்டவிரோத நிர்மாணிப்புகள் மற்றும்  “ஆ” பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அனுமதியற்ற கட்டிடம் தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகாரசபை பின்பற்றும் நடைமுறை யாதென்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-03-25

கேட்டவர்

கௌரவ கெளரவ மொஹமட் அஸ்லம், பா.உ.,, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks