பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
255/2020
கெளரவ வேலு குமார்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) கண்டி மாவட்டத்தின் தெல்தோட்டை பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள போபிட்டிய தோட்டம் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு சொந்தமான தோட்டம் என்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) 1992 ஆம் ஆண்டு அரசாங்கம் வசமிருந்த தோட்டங்களை மறுசீரமைப்புச் செய்த போது இத்தோட்டத்திற்கு சொந்தமாயிருந்த பிரிவுகளின் (Divisions) எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) அப்பிரிவுகளின் பெயர்கள் யாவையென்பதையும்;
(iii) அத்தோட்டத்தில் முழுமையாக பயிர்செய்கை மேற்கொண்ட நிலப்பகுதியின் அளவு யாதென்பதையும்;
(iv) மேற்குறிப்பிட்ட தோட்டத்தில் 2015 ஆம் ஆண்டளவில் கைவிடப்பட்ட பிரிவுகள் உள்ளனவாவென்பதையும்;
(v) அவ்வாறாயின், அப்பிரிவுகளின் மொத்த நிலப் பகுதியின் அளவு யாதென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பார?
(இ) (i) 1992 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இத்தோட்டத்திற்குச் சொந்தமான காணிகள் மற்றும் கட்டடங்கள் வெளித்தரப்பிற்கு/ தனியார்துறைக்கு வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(ii) அவ் விபரங்கள் யாவை என்பதையும்;
(iii) இறுதியாக மேற்கொண்ட காணிக் கணக்கெடுப்புக்கு அமைவாக பயிர்ச்செய்கை மேற்கொண்ட காணிகள் மற்றும் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாத காணிகளின் அளவு யாதென்பதையும்;
வெவ்வேறாக அவர் மேலும் அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-11-04
கேட்டவர்
கௌரவ வேலு குமார், பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2021-01-19
பதில் அளித்தார்
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks