01

E   |   සි   |  

 திகதி: 2020-09-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0250/2020: வைத்தலாவ தோட்ட 'உதா கம்மான வீட்டு திட்டம்': விபரம்

250/2020

கௌரவ வேலுகுமார்,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள, அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வைத்தலாவ தோட்டத்தில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் "உதா கம்மான வீட்டு திட்டம்" ஆரம்பிக்கபட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்குறிப்பிட்ட தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள —

(i) ஒவ்வொரு உதா கம்மான வீடமைப்புத் திட்டங்களின் எண்ணிக்கை;

(ii) திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை;

தனித்தனியே யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) வீடொன்றை நிர்மாணிப்பதற்கு ஒவ்வொரு பயனாளிக்கும் —

(i) பெற்றுத்தருவதாக இணங்கிய தொகை;

(ii) பெற்றுக்கொடுக்கப்படும் மொத்தத் தொகையில் கடன் தொகை;

(iii) பெற்றுக்கொடுக்கப்படும் மொத்தத் தொகையில் உதவித் தொகை;

(iv) இற்றைவரையில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள தொகை;

தனித்தனியே எவ்வளவென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) ஒவ்வொரு பயனாளிக்கும் எஞ்சிய பணத்தை பெற்றுக்கொடுத்து இக்கருத்திட்டத்தை பூர்த்திச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும் மேலும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-09-25

கேட்டவர்

கௌரவ வேலு குமார், பா.உ.

அமைச்சு

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-09-25

பதில் அளித்தார்

கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks