பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2011-03-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0903/2011: Mr. M.R.M. Silmi

0903 / ’10

 கெளரவ மொஹமட் அஸ்லம்,—  கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      அலுத்கம, தர்கா நகர், தேசிய கல்வியியல் கல்லூரியில்  இணைந்த விரிவுரையாளராக கடைமையாற்றுகின்ற திரு எம்.ஆர்.எம் சில்மி இலங்கை கல்வி நிருவாக சேவையின் III ஆம் வகுப்புக்கு உள்ளீர்ப்பதற்காக 2000/11/05ஆம் திகதியன்று நேர்முகப் பரீட்சைக்கு தோற்றியுள்ளாரென்பதையும்,

(ii) அனைத்து தகைமைகளையும் பூர்த்திச்செய்திருந்தும் களுத்துறை வலயக் கல்வி அலுவலகத்திலுள்ள அவரது பிரத்தியேக ஆவணக் கோப்பு பூரணப்படுத் தப்படாமையினாலும் உரிய விதத்தில் பராமரிக்கப்படாமையினாலும் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு இவருக்கு கிடைக்கவில்லையென்பதையும்,

அவர் அறிவாரா?

(ஆ) 82/2000 ஆம் இலக்க 2000/8/24 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் படி பதவி உயர்வுக்காக  பட்டதாரியான இணைந்த விரிவுரையாளரொருவர் 2000/8/24 ஆம் திகதிக்கு 5 வருட சேவைக் காலத்தை பூர்த்தி செய்திருப்பதன் தேவையை முதுமாணி பட்டதாரியான (M.A) திரு. சில்மி 2000 /7 /11 ஆம் திகதியளவில் பூர்த்திசெய்துள்ளாரென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?

(இ) ஆமெனில், திரு. சில்மிக்கு மேற்படி பதவி உயர்வு வழங்குவதை மேலும் தாமதப்படுத்துவதற்கான காரணங்கள் யாவையென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) 2000/12/08 ஆம் திகதி முதல் நடைமுறைக்குவரும் வகையில் திரு. சில்மியை இலங்கை கல்வி நிருவாக சேவையின் III ஆம் வகுப்புக்கு உள்ளீர்த்து, அப் பதவிக்குரிய சம்பள மட்டத்தின் பிரகாரம்  அனைத்து நிலுவைச் சமபளங்களையும் கொடுப்பனவுகளையும் தாமதமின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(உ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-03-25

கேட்டவர்

கௌரவ கெளரவ மொஹமட் அஸ்லம், பா.உ.,, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks