பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0900/ ’10
கெளரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார,— கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஊவா மூலதன கூட்டுறவுச் சங்கத்தின் (ஊவா மூலதன கூட்டுறவு வங்கி) பணிப்பாளர் சபை கூட்டுறவுச் சட்டத்துக்கமைய நியமிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) இப்பணிப்பாளர் சபை நியமிக்கப்படுகையில் சட்டபூர்வமாக செயற்குழுக் கூட்டங்களும் பொதுச் சபைக் கூட்டங்களும் நடாத்தப்பட்டிருந்ததா என்பதையும்;
(iii) இக்கூட்டுறவு சங்கத்தின் பொதுச் சபைக் கூட்டம் நடாத்தப்பட்ட இடமும் திகதியும் யாது என்பதையும்;
(iv) இக்கூட்டுறவுச் சங்கத்திலிருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(v) இவர்களின் பெயர் மற்றும் முகவரிகள் யாவைஎன்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) ஊவா மூலதன கூட்டுறவுச் சங்கத்தின் தற்போதைய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையின் பெயர்கள் யாவை என்பதையும்;
(ii) இதன் பொது முகாமையாளரினதும் நிறைவேற்று உத்தியோகத்தர்களினதும் பெயர்கள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) இக்கூட்டுறவுச் சங்க வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் தற்போதைய தலைவர் ஆகியோர் சகோதரர்களென்பதையும்;
(ii) இதன் பொது முகாமையாளர் முன்னாள் தலைவரின் மனைவி என்பதையும்;
(iii) இங்கு நடைபெற்றுள்ள ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பாக கணக்காய்வு அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதென்பதையும்
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஈ) மேலே (இ) (iii) இல் குறிப்பிடப்பட்ட கணக்காய்வு அறிக்கையின்படி சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-03-23
கேட்டவர்
கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.
அமைச்சு
கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks