04

E   |   සි   |  

 திகதி: 2020-10-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0206/2020: Tank and Canals issue in Mannar

206/2020

கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன்,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மன்னார் மாவட்டத்தின் கமத்தொழில் செயற்பாடுகளுக்குத் தேவையான நீரை விநியோகிக்கும் பிரதான நீர்ப்பாசன நீர்த்தேக்கமானது கட்டுக்கரை என்பதையும்;

(ii) இக்குளத்தின் கீழ் 162 நீரேந்துக் குளங்கள் காணப்படுகின்றன என்பதையும்;

(iii) இந்நீரேந்துக் குளங்களுக்கு 10 பிரதான கால்வாய்கள் மூலம் நீர் விநியோகிக்கப்படுகின்றதென்பதையும்;

(iv) நீண்டகாலமாக இந்த 10 கால்வாய்களும் புனரமைப்புச் செய்யப்படாமையினால் குளங்களுக்கு விநியோகிக்கப்படும் நீர் விரயமாகின்றதென்பதையும்;

(v) இதன் காரணமாக குளத்திலுள்ள நீரை வயல்களுக்கு பெற்றுக்கொள்ள முடியாமையினால் பயிர்கள் அழிவடைகின்றன என்பதையும்;

(vi) நான் மேற்படி கால்வாயை புனரமைப்புச் செய்ய வேண்டுமென பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து 5 கால்வாய்களை புனரமைப்புச் செய்வதற்கு 2019.06.06 ஆம் திகதி ரூபா 95,288,568.42 அப்போதைய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதென்பதையும்;

(vii) மேற்படி கால்வாய்களில் வேலைகள் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் புதிய அரசாங்கம் பதவியேற்றமையால் வேலைகளை ஆரம்பிக்காது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) ஆமெனில், பயிர்ச்செய்கைகளை உரிய வகையில் மேற்கொள்வதற்கு வழிவகை செய்யும் மேற்படி கால்வாய்களின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-08

கேட்டவர்

கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசனம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-10-08

பதில் அளித்தார்

கௌரவ சமல் ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks