பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
204/2020
கௌரவ முஜிபுர் ரஹுமான்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இதய சத்திர சிகிச்சைகள் செய்வதற்காக அரசாங்க வைத்தியசாலைகளில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வருடக்கணக்காக காத்திருப்போர் பட்டியலில் இருக்கின்றார்கள் என்பதையும்;
(ii) இச் சத்திர சிகிச்சைகளுக்கு இலங்கையிலும் வெளிநாட்டிலும் தனியார் வைத்தியசாலைகளில் மில்லியன் கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) ஆம் எனில் —
(i) கடந்த ஐந்து வருடங்களில் இலங்கையில் அறிக்கையிடப்பட்ட இதயம் தொடர்பான நோய்கள் எத்தனை என்பதையும்;
(ii) கடந்த ஐந்து வருடங்களில் அரசாங்க வைத்தியசாலைகளில் இதய சத்திர சிகிச்சைகளுக்காக பதிவு செய்யப்பட்ட நோயாளிகள் எத்தனை பேர் என்பதையும்;
(iii) கடந்த ஐந்து வருடங்களில் பதிவு செய்யப்பட்ட நோயாளிகளில் வருடாந்தம் எத்தனை சத்திர சிகிச்சைகள் நடாத்தப்படுகின்றன என்பதையும்;
அவர் சபைக்குத் தெரிவிப்பாரா?
(இ) (i) தற்போதைய நடைமுறையில் அரசாங்கம் திருப்தி அடைகிறதா என்பதையும்;
(ii) தற்போது நிலவும் இந்நிலைமையை மேலதிக முன்னேற்றத்திற்கான முக்கிய அவதானிப்புகள், சிபாரிசுகள் என்னவென்பதையும்;
அவர் சபைக்குத் தெரிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-09-22
கேட்டவர்
கௌரவ முஜிபுர் ரஹுமான், பா.உ.
அமைச்சு
சுகாதாரம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-12-01
பதில் அளித்தார்
கௌரவ (திருமதி) சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks