02

E   |   සි   |  

 திகதி: 2011-02-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0899/2011: Cirrhosis on Alchol consumption

0899/ ’10

 

கெளரவ காமினி ஜயவிக்ரம பெரேரா,—  சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    மது அருந்தி நோய்வாய்ப்பட்ட ஒருவரை அரசாங்க வைத்தியசாலைக்கு அனுமதிக்கும் போது பணம் அறவிடப்படுகின்றதா என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) ஆயுர்வேத மருத்துவ முறைகளில் மதுசாரம் கலந்த அரிஷ்ட வகைகள் மற்றும் கஞ்சா கலந்த மருந்து வகைகள் சகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படுவதுடன், நீண்டகாலமாக அவ்வாறான சிகிச்சைகளை பெறுவதன் காரணமாகவும் மதுபானத்தை உபயோகிப்பதனால் ஏற்படக்கூடிய “சிரோஸிஸ்” என்றழைக்கப்படுகின்ற நோய் நிலை ஏற்படுமென்பதை அவர் அறிவாரா?

(இ) (i) எவரேனும் ஒருவருக்கு “சிரோஸிஸ்” நோய் ஏற்பட்டிருப்பது மதுபானம் அருந்தியதனாலா அல்லது மேற்படி ஆயுர்வேத சிகிச்சை முறைகளினாலா என்பதை தனித்தனியே இனங்காண்பதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையியலொன்று உள்ளதா என்பதையும்,

(ii) அவ்வாறாயின், அந்த முறையியல் என்னவென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-02-24

கேட்டவர்

கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks