பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
187/2020
கௌரவ சிவஞானம் சிறீதரன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் கிளி/கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் என்ற பெயரில் பாடசாலையொன்று உள்ளது என்பதையும்;
(ii) கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள தேசிய பாடசாலைகளில் இரண்டில் ஒன்றான மேற்படி பாடசாலையில் தரம் குறைவான கல்வி, ஆசிரியர்கள்/ஊழியர்கள் பற்றாக்குறை, தளபாடங்கள்/கட்டடங்கள் பற்றாக்குறை, வளப் பற்றாக்குறை உட்பட பல குறைபாடுகள் காணப்படுகின்றன என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) மேற்படி பாடசாலைக்குத் தேவையான கட்டிடங்கள் மற்றும் தளபாடங்களை பெற்றுக்கொடுக்கும் திகதி யாதென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) மேற்படி வித்தியாலயத்தின் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் உட்பட மொத்தப் பணியாட்தொகுதியிலும் ஒவ்வொரு பதவிகளின் விபரங்கள் யாவை என்பதையும் அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஈ) இப்பாடசாலையில் கல்விசாரா பணியாட்தொகுதியில் வெற்றிடங்கள் காணப்பட்ட போதிலும், இற்றைவரையில் இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும் அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(உ) குறித்த வெற்றிடங்களை நிரப்பாது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த முடியாதென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஊ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-09
கேட்டவர்
கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-10-09
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks