04

E   |   සි   |  

 திகதி: 2020-10-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0186/2020: Details of Mulangavil school in Kilinochchi

186/2020

கௌரவ சிவஞானம் சிறீதரன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (

(அ) (i) கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் கிளி/முழங்காவில் மகா வித்தியாலயம் எனும் பாடசாலையொன்று உள்ளதென்பதையும்;

(ii) கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தேசிய பாடசாலைகள் இரண்டில் ஒன்றான மேற்படி பாடசாலையின் கல்வி நிலை கீழ் மட்டத்தில் இருப்பதுடன் ஆசிரியர்கள்/ஊழியர்கள் வெற்றிடங்கள், தளபாடங்கள்/ கட்டடங்கள் பற்றாக்குறை மற்றும் வளப் பற்றாக்குறை உட்பட பல குறைபாடுகள் உள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) இப்பாடசாலைக்குத் தேவையான கட்டடங்கள் மற்றும் தளபாடங்களைப் பெற்றுக் கொடுக்கும் திகதி யாதென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) மேற்குறிப்பிட்ட வித்தியாலயத்தின் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் உட்பட ஒட்டுமொத்த பணியாட்டொகுதியின் ஒவ்வொரு பதவியினதும் விபரங்கள் யாவையென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஈ) மேற்குறிப்பிட்ட வித்தியாலயத்தில் சிற்றூழியர் பதவிக்கான வெற்றிடங்கள் 17 நிலவுகின்ற போதிலும் இதுவரை அவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காமைக்கான காரணங்கள் யாவையென்பதை அவர் மேலும் இச்சபையில் அறிவிப்பாரா?

(உ) மேற்குறிப்பிட்ட வெற்றிடங்களை நிரப்பாமல் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த முடியாதென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஊ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-08

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-10-08

பதில் அளித்தார்

கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks