பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
180/2020
கௌரவ சிவஞானம் சிறீதரன்,— வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு, —
(அ) கிளிநொச்சி நகர மத்தியில் அமைந்துள்ள வரையறுக்கப்பட்ட லங்கா சதோச வர்த்தகக் கட்டடமானது முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) குறித்த கட்டடம் அமைந்துள்ள காணி எந்த நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பதையும்;
(ii) மேற்படி கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ள காணியானது நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) குறித்த கட்டடத்தின் தற்போதைய உரிமையாளர் யாரென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) குறித்த கட்டடத்தை —
(i) நிர்மாணிப்பதற்கான அனுமதியை, உரிய முறைப்படி கரைச்சி பிரதேச சபையிடமிருந்து பெறப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) அரச செலவில் நிர்மாணிக்கப்பட்டதாயின், கேள்வி மனுக்கோரல் மேற்கொள்ளப்பட்ட முறை தொடர்பான விபரங்கள் யாவையென்பதையும்;
(iii) நிர்மாணிப்புப் பணிகளுக்கான செலவு எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-09-22
கேட்டவர்
கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.
அமைச்சு
வர்த்தகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-09-22
பதில் அளித்தார்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks