04

E   |   සි   |  

 திகதி: 2020-11-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

0149/2020: குடாபுத்கமுவ ஸ்ரீ இராஜசிங்க வித்தியாலயம்: அலுவலர்களுக்கான வெற்றிடங்கள்

149/2020

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கொலொன்னாவ கல்விக் கோட்டத்தில் அமைந்துள்ள ஒரேயொரு கலவன் தேசிய பாடசாலையாகிய குடாபுத்கமுவ ஸ்ரீ இராஜசிங்க வித்தியாலயத்தில் கல்விசார் பணியாட்டொகுதியில் வரலாறு, குடியியற் கல்வி, நாடகமும் அரங்கியலும், ஆகிய பாடங்களுக்கு 02 ஆசிரியர்கள் வீதமும், தமிழ் மொழி, சித்திரக் கலை, தகவல் தொழில்நுட்பம், ஊடகக் கல்வி, பௌதிகவியல், விவசாயம், உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல், கணக்கீடு, தொடர்பாடல் மற்றும் ஊடகவியற் கற்கை, பௌத்த நாகரிகம் ஆகிய பாடங்களுக்கு 01 ஆசிரியர் வீதமும் மாணவர்களுக்கான உளவள ஆலோசனை, ஆசிரிய நூலகர் ஆகிய ஏதுவான பதவிகளில் 01 வெற்றிடம் வீதமும் வெற்றிடங்கள் நிலவுகின்றதென்பதையும்;

(ii) கல்விசாரா பணியாட்டொகுதியிலும், துப்பரவேற்பாட்டு தொழிலாளர், பூங்கா பணிகளுக்கான தொழிலாளர் மற்றும் சாதாரண தொழிலாளர் ஆகிய பதவிகளில் 02 வெற்றிடங்கள் வீதமும் விஞ்ஞானக் கூட உதவியாளர் பதவியில் 03 பதவி வெற்றிடங்களும் முகாமைத்துவ உதவியாளர் பதவியில் 01 வெற்றிடமும் நிலவுகின்றதென்பதையும்;

அவர்அறிவாரா?

(ஆ) மேற்படி பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சு கொண்டுள்ள திட்டங்களையும் இவ் வெற்றிடங்களை நிரப்புகின்ற திட்டவட்டமான திகதிகள் யாவையென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-03

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-12-01

பதில் அளித்தார்

கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks