01

E   |   සි   |  

 திகதி: 2020-10-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0130/2020: உள்ளூராட்சி நிறுவனங்களின் ஆளுகைப் பிரதேசத்தில் கழிவுகளை அகற்றுதல்: தனியார் நிறுவனங்களைப் பயன்படுத்தல்

130/2020

கௌரவ சமிந்த விஜேசிறி,— அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள மாநகர சபைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும்;

(iii) மேற்படி மாநகர சபைகளில் கழிவுகளை அகற்றும் விடயத்தை தனியார் நிறுவனங்களுக்கு கையளித்துள்ள மாநகர சபைகளின் பெயர்கள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி மாநகரசபைகளின் கழிவுகளை அகற்றும் பணிகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ள தனியார் கம்பனிகளின் பெயர்கள் யாவையென்பதையும்;

(ii) 2015 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை மேற்படி கம்பனிகளுக்கு செலுத்தப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவென்பதையும்;

அவர் வெவ்வேறாக இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) உள்ளூராட்சி நிறுவனங்களின் ஊழியர்களை ஈடுபடுத்தி அவற்றின் ஆளுகைப் பிரதேசத்திலுள்ள கழிவுகளை அகற்றுவதற்கு அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-20

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-04-07

பதில் அளித்தார்

கௌரவ ரொசான் ரணசிங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks