பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
129/2020
கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன்,— இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மன்னார் மாவட்டத்தின், மன்னார் பிரதேச செயலகப் பிரிவிற்குரிய பள்ளிமுனை கிராமத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு நடவடிக்கைகள், அப்போதைய மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், கடந்த ஐந்து ஆண்டுகளிற்கு மேலாக அதன் பணிகள் நிறைவு செய்யப்படவில்லை என்பதையும்;
(ii) மேற்படி விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொண்ட ஒப்பந்தக்காரரின் நீர் மற்றும் மின்சார இணைப்புகளுக்காக செலுத்தப்பட வேண்டிய அதிக நிலுவைத் தொகை காரணமாக மேற்படி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன என்பதையும்;
(iii) மேற்படி விளையாட்டு மைதானத்தின் எஞ்சிய பணிகள் ஓராண்டுக்குள் ஆரம்பிக்கப்படுமென நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் பல தடவை தமக்கு வாக்குறுதி அளித்துள்ள போதிலும், இதுவரை குறித்த எஞ்சிய பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி பள்ளிமுனை விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகளை துரிதமாக நிறைவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(ii) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-07
கேட்டவர்
கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.
அமைச்சு
இளைஞர் மற்றும் விளையாட்டு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-10-07
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks