பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
125/2020
கெளரவ சாள்ஸ் நிர்மலநாதன்,— இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு மைதானத்தை நிர்மாணிப்பதற்கான இடம் தொிவு செய்யப்பட்டு அதற்கான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது என்பதையும்;
(ii) ஆயினும், இதுவரை அதன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) ஆமெனில், மேற்படி விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) மன்னார் மாவட்ட விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப் பணிகள் ஐம்பது வீதத்திற்கும் மேற்பட்ட அதன் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள போதிலும் தற்போது 2 வருடங்களாக அதன் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன என்பதையும்;
(ii) மன்னார் நகர எல்லைக்குள் வருகின்ற எமில் நகர் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற பொது விளையாட்டு மைதானத்தின் முதலாம் பகுதியின் மறுசீரமைப்புப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள போதிலும், அதன் இரண்டாம் பகுதி இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஈ) ஆமெனில், மேற்படி விளையாட்டு மைதானத்தின் இரண்டாம் பகுதியின் பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-09-23
கேட்டவர்
கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.
அமைச்சு
இளைஞர் மற்றும் விளையாட்டு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-09-23
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks