01

E   |   සි   |  

 திகதி: 2011-02-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0890/2011: Elephant clashes in Badulla District

0890/ ’10

கெளரவ ஹரின் பெர்னாந்து,— கமநல சேவைகள், வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      யானை மனித மோதலை குறைப்பதற்காக மின்வேலிகளை அமைக்கின்றபோது அவை உரிய தரத்தில் நடைபெறுகின்றதா என்பதையும்,

           (ii)    பதுளை மாவட்டத்தில் ரிதீமாலியத்த, மஹியங்கனை, கந்தகெட்டிய, மீகஹகிவுல, ஊவா பரணகம மற்றும் ஹல்தும்முல்ல ஆகிய பிரதேசங்களில் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மின்வேலிகளை அமைத்தல் எப்போது ஆரம்பிக்கப்பட்டு எப்போது முடிவடையும் என்பதையும்,

(iii) மேற்படி மின்வேலிகளை அமைப்பதில் தாமதம் ஏற்படுமா என்பதையும்,

(iv) ஆமெனில், அதற்கான காரணம் யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) காட்டு யானைகளின் தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள நட்டங்களுக்கு நட்டஈடு செலுத்துவதில் தாமதம் ஏற்படுகின்றதென்பதையும்,

(ii) அது சம்பந்தமாக தற்போது வழங்கப்படும் நட்டஈட்டுத் தொகை போதியதாக இல்லையென்பதையும்

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(இ) ஆமெனில், இந்த நட்டஈடு செலுத்துவதை துரிதப்படுத்துவதற்கும் நட்டஈட்டு்த் தொகையை அதிகரிப்பதற்கும் பொருத்தமான வேலைத்திட்டமொன்றை துரிதமாக நடைமுறைப்படுத்துவாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-02-24

கேட்டவர்

கௌரவ ஹரின் பிரனாந்து, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks