பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
105/2020
கௌரவ புத்திக பத்திறண,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகிய ஒவ்வொரு நிறுவனத்தினாலும் 2017.01.01 முதல் 2019.01.01 வரையில் —
(i) மேற்கொள்ளப்பட்ட செயற்கை கள்ளு சுற்றுவளைப்புகளின் எண்ணிக்கை;
(ii) மேற்குறிப்பிட்ட காலத்தில் கைப்பற்றப்பட்ட செயற்கை கள்ளு லீற்றர்களின் அளவு;
(iii) மேற்படி சுற்றிவளைப்புக்களில் அறவிடப்பட்ட அபராதத்தின் பெறுமதி;
தனித்தனியாக எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) சில கள்ளு உற்பத்தியாளர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ள அளவினையும்விட களஞ்சிய வசதிகளை பேணி வருகிறார்கள் என்பதையும்;
(ii) அவர்கள் செயற்கை கள்ளு உற்பத்தி செய்து களஞ்சியப்படுத்துகின்றார்கள் என்பதையும்;
(iii) விசேட அதிரடிப்படை சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு இச்செயற்கைக் கள்ளினை கைப்பற்றியபோதிலும், சில மதுவரி உத்தியோகத்தர்கள் அவற்றை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாது, தொழில்நுட்ப கோளாறுகளாக சுட்டிக்காட்டி, தீர்வுக் கட்டணத்துக்கு உட்படுத்தி குற்றவாளிகளை விடுதலை செய்வதாகவும்;
(iv) செயற்கை கள்ளினை உற்பத்தி செய்வதானது தொழில்நுட்பக் கோளாறல்ல, மாறாக அது சில மதுவரி உத்தியோகத்தர்கள் வேண்டுமென்றே இந்த உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதற்காக எடுக்கும் நடவடிக்கையே என்பதையும்;
(v) அதனால் அரசாங்கம் அதிகளவிலான வரி வருமானத்தை இழக்கின்றது என்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(இ) (i) செயற்கை கள்ளு உற்பத்தியை நிறுத்துவதற்கான சட்ட மறுசீரமைப்புக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா;
(ii) ஆமெனில், குறிப்பிட்ட நடவடிக்கைகள் யாவை;
என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-09
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2021-12-02
பதில் அளித்தார்
கௌரவ அஜித் நிவாட் கப்ரால், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks