04

E   |   සි   |  

 திகதி: 2011-02-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0889/2011: Aqqusition of Land in Minipe , Mahanuwara District

0889/ ’10

கெளரவ திஸ்ஸ அத்தநாயக்க,— காணி, காணி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      ஆட்சி மீளப் பெறுதல் சட்டத்தின் கீழ் 2000 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை கண்டி மாவட்டத்தில் மினிப்பே பிரதேச செயலாளரால் சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளின் பரப்பளவு, அக்காணிகளின் உரிமையாளர்களது பெயர்கள், முகவரிகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் யாவையென்பதையும்,

(ii) மேற்படி காலத்தினுள் மீளப் பெறப்பட்டுள்ள பல்லேவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவின் திரு. ஜீ.எம். புஞ்சி பண்டா வசித்து வந்த கட்டடத்துக்கு, கிணற்றுக்கு அல்லது காணிக்கு நெடுஞ்சாலைகள் அமைச்சின் தேசிய நெடுஞ்சாலைகள் துறை சார்ந்த கருத்திட்டத்தின் மூலம் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்,

(iii) ஆமெனில், நட்டஈடாக வழங்கப்பட்ட பணத் தொகை எவ்வளவென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா ?

(ஆ) திரு. புஞ்சிபண்டா போலி ஆவணங்களைத் தயாரித்து மேற்படி காணிக்கு மின்சாரம் பெற்றுக்கொண்டுள்ளார் என்பதையும், மேற்படி காணிக்கு உரிமப்பத்திரமொன்றை பெறுவதற்காக காணிகள் ஆணையாளர் நாயகத்தின் அனுமதிக்கான விண்ணப்பப்படிவமொன்றை  சமர்ப்பித்துள்ளாரென்பதையும் அவர் ஏற்றுக்கொள்வாரா ?

(இ) (i) காணியை மீளப் பெறுகின்ற போது திரு. புஞ்சி பண்டாவுக்கு வழங்கப்பட்டுள்ள நட்ட ஈட்டுப் பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கும்,

(ii) மேற்படி காணிக்கு தவறான முறையில் உரிமப்பத்திரம் வழங்கவும், அவ்வாதனத்திற்கு நட்டஈடு வழங்கவும், மின்சாரம் வழங்கவும் ஆலோசனை வழங்கிய மற்றும் அங்கீகரித்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக செயலாற்றுவதற்கும்

நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2011-02-25

கேட்டவர்

கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.

அமைச்சு

காணி, காணி அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks