04

E   |   සි   |  

 திகதி: 2020-09-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0097/2020: இந்திய அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்புடன் இலங்கையை இணைக்கும் திட்டம்: விபரம்

97/2020

கெளரவ புத்திக பத்திறண,— நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இந்திய அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்புடன் இலங்கையை இணைக்கும் திட்டமொன்றை அரசாங்கம் தயாரித்துள்ளதா என்பதையும்;

(ii) அவ்வாறாயின், அது நடைமுறைக்கு வரும் திகதி யாதென்பதையும்;

(iii) இலங்கை அரசாங்கம் அதற்காக செலவிட எதிர்பார்த்துள்ள தொகை எவ்வளவென்பதையும்;

(iv) மேற்படி கருத்திட்டத்தினால் இலங்கைக்குப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் நன்மைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி கருத்திட்டத்தினால் ஏற்படக்கூடிய ஒவ்வாத கலாசார மற்றும் சமூக ரீதியான மாற்றங்கள் தொடர்பில் புலமைசார் ஆய்வொன்று மேற்கொள்ளப் பட்டுள்ளதா என்பதையும்;

(ii) அவ்வாறாயின், அந்த ஆய்வின் விதப்புரைகள் யாவை என்பதையும்;

(iii) இன்றேல், அத்தகைய ஆய்வொன்று மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-09-23

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-09-23

பதில் அளித்தார்

கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks