04

E   |   සි   |  

 திகதி: 2020-09-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0093/2020: சமூக பொலிஸ் அலகுகள்: விபரம்

93/2020 கௌரவ புத்திக பதிரண,— பிரதம அமைச்சரும் நிதி, புத்தசாசன, சமய , கலாசார அலுவல்கள்அமைச்சரும் மற்றும் நகர அபிவிருத்தி,வீடமைப்பு அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (அ) (i) இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள சமூக பொலிஸ் அலகுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்; (ii) அந்த அலகுகளுக்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ள பொலிஸ் அலுவலர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்; (iii) சமூக பொலிஸ் அலகினூடாக பெற்றுக் கொள்ளக் கூடிய சேவைகள் தொடர்பில் மக்களை அறிவுறுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்; (iv) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவை என்பதையும்; அவர் இச்சபையில் தெரிவிப்பாரா? (ஆ) (i) சமூக பொலிஸ் அலகுகளின் கடந்த வருட முன்னேற்றம் தொடர்பில் திருப்தியடைய முடியுமா என்பதையும்; (ii) 2018 மற்றும் 2019 ஆம் வருடங்களில் சமூக பொலிஸ் அலகுகளினால் மேற்கொள்ளப்பட்ட சேவைகளின் நிதி ரீதியான பெறுமதி அளவீடு செய்யப்பட்டுள்ளதா என்பதையும்; (iii) ஆமெனில், அதன் நிதி ரீதியான பெறுமதி எவ்வளவு என்பதையும்; அவர் இச்சபையில் தெரிவிப்பாரா? (இ) (i) சமூக பொலிஸ் அலகுகளின் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வகையில் புதிய சட்டமொன்று சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்பதை அவர் ஏற்றுக் கொள்வாரா என்பதையும்; (ii) ஆமெனில், புதிய சட்டமொன்றினை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்; அவர் மேலும் இச்சபையில் தெரிவிப்பாரா? (ஈ) இன்றேல், ஏன்? 1_1

கேட்கப்பட்ட திகதி

2020-09-23

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-09-23

பதில் அளித்தார்

கௌரவ சமல் ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks