04

E   |   සි   |  

 திகதி: 2020-10-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0015/2020: சட்ட விரோத போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு்: விபரம்

15/2020

கௌரவ ஹேஷா விதானகே,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015.02.01 ஆம் திகதி தொடக்கம் இதுவரை சட்ட விரோத போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு சம்பந்தமாக கைது செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடத்தின் பிரகாரம் தனித்தனியாக யாதென்பதையும்;

(ii) சட்ட விரோத போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்ற அரச அல்லது அரச அனுசரணை பெற்றுள்ள நிறுவனங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

(iii) மேற்படி ஒவ்வொரு நிறுவனத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ள சட்ட விரோத போதைப் பொருளின் அளவு வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-09

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-10-09

பதில் அளித்தார்

கௌரவ சமல் ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks