பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
14/2020
கௌரவ ஹேஷா விதானகே,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களும் சில காலமாக சட்டவிரோதமான போதைப்பொருட்களை விநியோகிக்கும் மையமாக மாறியுள்ளதென்பதையும், பாடசாலை மாணவர்களையும் இளைஞர்களையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகின்ற மேற்படி விநியோக வலைப்பின்னல் தொடர்ந்தும் வலுவான முறையில் செயற்படுகின்றதென்பதையும் அவர் அறிவாரா?
(ஆ) கடந்த இரண்டு ஆண்டுகளில் இரத்தினபுரி மாவட்டத்தில் —
(i) மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) போதைப்பொருட்களுடன் தொடர்புடைய தவறுகள் சார்ந்ததாக கைது செய்யப்பட்ட ஆட்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) கைப்பற்றப்பட்ட சட்டவிரோத போதைப்பொருட்களின் பெறுமதி எவ்வளவென்பதையும்;
தனித்தனியாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) தற்போது இனங்காணப்பட்டுள்ள சட்டவிரோத போதைப்பொருட்கள் எனும் வகைக்குள் உள்ளடங்கும் போதைப்பொருட்களின் வகைளையும் அவை எந்த நாடுகளிலிருந்து இந்நாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றதோ அந்நாடுகளின் பெயர்ப்பட்டியலையும் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(ii) மேற்படி சட்டவிரோத போதைப்பொருட்களை விற்பனை செய்யும் பேர் வழிகளை துரிதமாக சட்டத்தின் பிடியில் சிக்கவைத்து போதைப்பொருள் ஆபத்தை பிரதேசத்திலிருந்து இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-08
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-10-08
பதில் அளித்தார்
கௌரவ சமல் ராஜபக்ஷ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks