logo

E   |   සි   |  

 திகதி: 2020-02-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0129/2020: Raids to net illegal drugs

129/2020

கெளரவ ஆனந்த அலுத்கமகே,— மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் மற்றும் உள்ளக வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலனோம்புகை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) கடந்த இரண்டு வருடங்களுள் கண்டி மாவட்டத்தில்,

(i) மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சார்ந்த சுற்றிவளைப்புகளின் எண்ணிக்கை;

(ii) போதைப்பொருள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை;

(iii) கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி;

வெவ்வேறாக யாது என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) தற்போது தடைசெய்யப்பட்டுள்ள சட்டவிரோத போதைப்பொருள் வகையைச் சோ்ந்த போதைப்பொருள்களாக இனங்காணப்பட்டுள்ள மற்றும் அவை கொண்டுவரப்படும் நாடுகள் அடங்கிய பெயர் பட்டியலொன்றை அவர் இச்சபையில் சமர்ப்பிப்பாரா?

(இ) (i) கண்டி மாவட்டத்தில், கம்பளை மற்றும் அண்மிய பிரதேசங்கள் நீண்ட காலமாக போதைப் பொருள்களை விநியோகிக்கும் மத்திய நிலையமாக இயங்கி வருவதையும், பாடசாலை மாணவர்களையும் இளைஞர்களையும் இலக்கு வைத்து இயங்கி வரும் இந்த விநியோக வலையமைப்பு இதுவரையும் பலமான நிலையில் காணப்படுவதையும் அறிவாரா என்பதையும்;

(ii) இந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களை விரைவாக சட்டத்தின்முன் நிறுத்தி, அப்பிரதேசத்திலிருந்து போதைப்பொருள்களை ஒழிக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-02-19

கேட்டவர்

கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks