பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
124/2020
கௌரவ பிமல் ரத்நாயக்க,— மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் மற்றும் உள்ளக வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலனோம்புகை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை விமானப் படையின் எயார் வைஸ் மார்ஷலாகப் பதவி வகித்த திரு.கே.ரீ.பீ.பீ.ஜயம்பதி அவர்கள் 2008.01.08 ஆம் திகதி சலுகை அடிப்படையின் கீழ் மோட்டார் வாகனமொன்றை இறக்குமதி செய்வதற்காக அனுமதிப்பத்திரமொன்றைப் பெற்றுக்கொண்டு தமது வாகனத்தை சுங்கத்திலிருந்து விடுவித்துக் கொண்டுள்ளார் என்பதையும்;
(ii) குறிப்பிட்ட உத்தியோகத்தருக்கு மீண்டும் சலுகை அடிப்படையில் வாகனமொன்றை இன்னும் 5 வருடங்களின் பின்னரே பெற்றுக்கொள்ள முடியுமாக உள்ளபோதிலும் மேற்படி அனுமதிப்பத்திரம் பற்றிய தகவல்களைப் போலியாகக் குறிப்பிட்டு 2011.01.14 ஆம் திகதி முன்னாள் விமானப் படைத் தளபதியினதும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரினதும் விதப்புரைகளுடன் மீண்டும் சலுகை அடிப்படையின் கீழ் மோட்டார் வாகனமொன்றை இறக்குமதி செய்வதற்காக விண்ணப்பப்படிவமொன்றைச் சமர்ப்பித்து 2011.06.07 ஆம் திகதி உரிய அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு மோட்டார் வாகனமொன்றை இறக்குமதி செய்துள்ளார் என்பதையும்;
(iii) அதன் பிரகாரம் அவர் சுற்றறிக்கை நியதிகளை மீறியுள்ளார் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) அதன் பிரகாரம் குறிப்பிட்ட உத்தியோகத்தருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கை யாதென்பதையும்;
(ii) சுற்றறிக்கை நியதிகளுக்கு எதிராக சலுகை அடிப்படையின் கீழ் மோட்டார் வாகனமொன்றை தருவிப்பதற்காக குறிப்பிட்ட உத்தியோகத்தருக்கு விதப்புரை செய்தமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கும் விமானப் படைத் தளபதிக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட ரீதியான நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-02-19
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
அமைச்சு
பாதுகாப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks