04

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0007/2020: State sponsorship for artwork aimed at reconciliation

7/2020

கௌரவ புத்திக பத்திறண,— பிரதம அமைச்சர் மற்றும் புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) நாட்டில் இன ஒற்றுமையையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதற்காக தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் போன்ற கலை ஊடகங்களைப் பயன்படுத்த முடியும் என்பதையும்;

(ii) சம்பந்தப்பட்ட துறைசார் விற்பன்னர்களை இதன்பால் ஈடுபடுத்துவதற்கு வேலைத்திட்டமொன்றை வகுப்பதன் மூலம் தரமான படைப்புகளை உருவாக்க முடியும் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) சகவாழ்வை மையப்படுத்தி கலைப் படைப்புகளை உருவாக்குவதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதையும்;

(ii) அவ்வாறாயின், அத்தகைய நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-01-24

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

புத்த சாசனம், கலாசார மற்றும் சமய அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks