04

E   |   සි   |  

 திகதி: 2020-01-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0003/2020: Updating MME Accredited List

3/2020

கௌரவ புத்திக பத்திறண,— திறன்கள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கட்டார் அரசின் நகர மற்றும் சுற்றாடல் அமைச்சு, (MME) அந்த அரசில் பணியாற்றுகின்ற அனைத்து பொறியியல் தொழில்வாண்மையாளர்களும் அந்த அமைச்சின் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டுமென புதிய ஒழுங்குவிதியொன்றை விதித்துள்ளதென்பதையும்;

(ii) பதிவு செய்து கொள்ளாத தொழில்வாண்மையாளர்கள் மூன்று வருடகால சிறை தண்டனைக்கு அல்லது 100,000 றியால் தண்டப்பணத்திற்கு ஆளாவர் எனவும்;

(iii) இலங்கையும் இந்த MME அனுமதியை சில கல்வி நிறுவனங்களுக்கு மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது என்பதையும்;

(iv) இலங்கைக்குள் இந்த MME பட்டியலில் சேர்த்துக் கொள்ளக்கூடிய மேலும் சில நிறுவனங்கள் இருக்கின்றதன என்பதையும்;

(v) இந்தியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் தரத்தில் குறைந்த நிறுவனங்களைக் கூட இந்த பட்டியலில் சேர்த்துக்கொண்டதால் எமது நாட்டின் தொழில்வாண்மையாளர்களின் தொழில்வாய்ப்புகளுக்கு ஆபத்து நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதையும்,;

அவர் அறிவாரா?

(ஆ) (i) MME பட்டியலை இற்றைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அதற்குள் சேர்க்கப்பட்ட புதிய நிறுவனங்கள் யாவை என்பதையும்;

(iii) மேற்படி அங்கீகாரம் இல்லாததன் காரணமாக தொழில் வாய்ப்புகளை இழந்துள்ள இலங்கை தொழில்வாண்மையாளர்கள் தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா என்பதையும்;

(iv) ஆமெனில், அந் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-01-22

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

திறன்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, தொழில் உறவுகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks